கடந்த 2014 தேர்தலில் தேநீர் விற்பனையாளராக இருந்த பிரதமர் மோடி, 2019 தேர்தலில் காவலாளியாக மாறிவிட்டார். இதுதான் நீங்கள் கூறிய மாற்றமா என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் ட்விட்டரில் தங்கள் பெயருக்கு முன் காவலாளி என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். இதனை விமர்சிக்கும் வகையில் மாயாவதி தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மோடி தேநீர் விற்பனையாளராக இருந்தார். இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் காவலாளியாக மாறிவிட்டார். பாஜக ஆட்சியில் ‘இந்தியா மாறுகிறது' என்று கூறுவது இதைத்தானா? இந்த மாற்றம் பிரமிப்பாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
மேலும் மாயாவதி கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அகிலேஷ் யாதவும் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கு காவலாளி பொறுப்பேற்பாரா’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.