Skip to main content

தனி மதமாக அறிவிக்க கோரும் ’லிங்காயத் சமூகம்!’ - இந்து மத காப்பாளர்கள் அதிர்ச்சி ..!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
   linkayath

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர்கள் தான். இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுபவர்கள்.  வீரசைவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். 12-ம் நூற்றாண்டில் சாதிய பாகுபாடுகளை களைய பாடுபட்ட சமூக சீர்த்திருத்தவாதியான பசவேஷ்வரா இந்த சமூகத்தின் மிக முக்கிய முன்னோடியாக இம்மக்களால்  கருதப்படுகிறார்.

 

இந்து மதத்தில் உள்ள வர்ண சாஸ்திரங்களை இவர்கள் எதிர்ப்பவர்கள், தொடக்கம் முதலே தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளவர்கள்.   இந்த சமூகத்தினர் தங்களை தனிமதமாக அங்கீகரிக்க வேண்டும் என நீன்ட  பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்து மதத்தில் இருந்து லிங்காயத்துகள் பிரிந்தால் இந்து மதம் கர்நாடகாவில்  பலவீனமாகும் என்று கருதியது ஆர்.எஸ்.எஸ். அந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவரான  மோகன் பகவத், லிங்காயத் சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து பல முறை சந்தித்து பேசினார். ஆனால் லிங்காயத் சமூகத்தினர்,  நாங்கள் வீர சைவர்கள் எங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை அப்படி இருக்கும் போது எங்களை ஏன் இந்து மதத்தில் தான் இருக்க வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்துகிறீர்கள். உங்கள் ஆலோசனையை நாங்கள் கேட்க மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்திற்கு பதில் சொல்லிவிட்டு வந்து விட்டனர். அதோடு இனி மோகன் பகவத் இவ்விஷயத்தில் தலையிட கூடாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில்தான் இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை லிங்காயத் சமூக பிரதிநிதிகள் சந்தித்து தங்களை தனி மதமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.   லிங்காயத் சமூகம் தங்களை தனி மதமாகவும் நாங்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று வெளிப்படையான போராட்ட நிலைக்கு வந்திருப்பது இந்து மத காப்பாளர்களான ஆர்.எஸ்.எஸ். தீவிர நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


அதற்கு காரணம் அடுத்து தமிழகம் உட்பட மொழி வாரியாக உள்ள மக்கள் தங்கள் வழிபாட்டு முறைப்படி தனித் தனி மதமாக அறிவிக்க கோரினால் இந்து மதம் என்பது இல்லாமல் போய்விடும் அபாயம் இருப்பதால்தான் ..!
 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொன்னால் அவரிடமே செல்லுங்கள்' - செவிட்டில் விட்ட உச்சநீதிமன்றம் 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கும், நியமனத்திற்கும் எதிராகப் பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளையும் சேர்த்து உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுகிறீர்கள்’ எனத் தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவித்தார். ‘ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள் ஆகம விதியைப் பின்பற்றும் கோவில்களில் நியமிக்கப்படுகிறார்கள்’ எனத் தமிழக அரசு பதிலளித்தது. தொடர்ந்து  இது தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க மனுதாரர் தரப்பு, 'தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசே கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்' எனத் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் சொன்னால் பிரதமரிடமே செல்லுங்கள்' என கண்டனம் தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Increase in pension for temple workers

 

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பில்  துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4, ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் ஓய்வுபெற்ற தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெற உள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.