வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் திரைப்படத்துறையை அதிகம் பயமுறுத்துவது பைரசி எனும் திருட்டுதனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செயல் தான். படம் ரிலீஸ் ஆனவுடன் திரையரங்குகளில் ஓடும் படத்தை வீடியோ எடுத்து அதனை ரிலீஸ் அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இதனால் திரைத்துறை பெரும் நஷ்டங்களை சந்திப்பதாக திரைத்துறையினர் வெகுகாலமாக புலம்பி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக படத்தை இணையத்தில் வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் இணையதள உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று கடைசியில் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், 'திரைப்படத்துறையில் வேகமாக வளர்ந்துவரும் வீடியோ பைரசியை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தின்படி புதிய விதிகள் இயற்றப்படும். சட்டவிரோத திரைப்படங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய சட்ட விதிகளும் உருவாக்கப்படும்' என தெரிவித்தார். இந்த திட்டமாவது தமிழ்ராக்கர்ஸை கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.