Skip to main content

சவுதி அரேபியாவுடன்  ஏர் பபுள் ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

SAUDI ARABIA

 

கரோனா பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைக்கு இந்தியா ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்த தடை அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுடன் ஏர் பபுள் ஒப்பந்தம் செய்துகொண்ட 34 நாடுகளுக்கு மட்டும் விமான சேவை நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் தற்போது சவுதி அரேபியாவும், இந்திய அரசும் ஏர் பபுள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன்காரணமாக விரைவில் இந்தியா மற்றும்  சவுதி அரேபியாவுக்கு இடையே விமான சேவை தொடங்கவுள்ளது.

 

அண்மையில் சவுதி அரேபியா, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்