Skip to main content

''ஆக்சிஜன் இருந்தால் தந்து உதவுங்கள்''-டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

"If you have oxygen, help me" - Delhi Chief Minister Kejriwal's letter

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் தொழில் தேவைக்கான ஆக்சிஜன் தயாரிப்பை நிறுத்தி மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜனை அனுப்பிவைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

குறிப்பாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதுவரை 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆக்சிஜன், டேங்கர்கள் இருந்தால் தந்து உதவுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரத்தில் உள்ள ஆக்சிஜன் நெருக்கடியை போக்க உதவுமாறு முன்னணி தலைவர்களுக்கு கடிதம் அவர் எழுதியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்