Skip to main content

கரோனா நவம்பரில் உச்சம் தொடுமா..? உண்மை நிலை குறித்து ஐசிஎம்ஆர் விளக்கம்...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

icmr refused peak of corona in india on november

 

இந்தியாவில் கரோனா வைரஸ் நவம்பர் மாதத்தில் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை என் ஐ.சி.எம்.ஆர், விளக்கமளித்துள்ளது.
 


இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இதுவரை இந்த வைரஸால் இந்தியாவில் 3.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு நவம்பரில் உச்சம் தொடும் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்தச் செய்தியை ஐ.சி.எம்.ஆர். மறுத்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தியை மேற்கோள்காட்டி ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள விளக்கத்தில், "ஐ.சி.எம்.ஆரின் ஆய்வு என்ற பெயரில் வெளியாகியிருக்கும் செய்திகள் தவறானது. இந்த ஆய்வு ஐ.சி.எம்.ஆரால் செய்யப்படவில்லை. இது ஐ.சி.எம்.ஆரின் நிலைப்பாடு இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்