Skip to main content

யாசகம் கேட்பது போல் வந்த ஆசாமி; அரசியல் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

he came as if asking for charity; A sickle cut to the political leader who went to give

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சிப் பிரமுகரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகரில் தெலுங்கு தேச கட்சிப் பொறுப்பாளராக இருப்பவர் சேஷாகிரி ராவ். வியாழன் அன்று காலை அவரது வீட்டிற்கு யாசகம் கேட்பது போல் வந்த ஒருவர் அவரிடம் யாசகம் கேட்டுள்ளார். சேஷாகிரி ராவ் கொண்டு வந்து கொடுக்கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயற்சித்துள்ளார். 

 

அவரது கையிலும், மார்பு பகுதியிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. சேஷாகிரி ராவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கொலை செய்ய முயற்சி செய்தவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து சேஷாகிரி ராவ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். 

 

இந்நிலையில், சேஷகிரி ராவின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர் வெட்ட முயற்சித்தது பதிவாகிய நிலையில், தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு கொலை செய்ய முயற்சித்த மர்ம நபரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

 

பக்தி மயமாக விரதமிருந்து அணியும் மாலையினை அணிந்து கொண்டு வந்த நபர் அரசியல் கட்சியின் பிரமுகரை வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்