Skip to main content

அயோத்தி வழக்கின் மனுதாரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019


அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் கடந்த 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.



இந்நிலையில் அயோத்தி வழக்கின் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பின் 18 மனுதாரர்களுக்கு துப்பாக்கிய ஏந்திய பாதுகாவலர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  தற்காலிக ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சார்யா சத்யேந்தர் தாஸ், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் டாக்டர் நஜ்முல் ஹசன் கனி, அவர்களது வழக்கறிஞர்கள் காலீத் அகமது மற்றும் பாத்ஷா கான் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்