Skip to main content

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

GREEN FUNGUS

 

கரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களை பூஞ்சை நோய்கள் பாதித்து வருகிறது. கருப்பு பூஞ்சை மட்டுமின்றி வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை உள்ளிட்ட பாதிப்புகளும் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

மத்தியப்பிரதேசத்தில் கரோனாவிற்காக 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவருக்கு பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த நபர், சிகிச்சைக்காக  ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் மும்பை கொண்டுசெல்லப்பட்டார்.

 

பச்சை பூஞ்சைக்கான சிகிச்சை, கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சையை விட மாறுபட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எடை குறைவு, உடல் சோர்வு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை பச்சை பூஞ்சையின் அறிகுறிகள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 

 

 

சார்ந்த செய்திகள்