Skip to main content

கோவாக்சின், கோவிஷீல்டுக்கு முழு சந்தை அங்கீகாரம்!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

covid vaccines

 

சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் கடந்தாண்டு தொடக்கத்தில் அவசரகால அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் கேட்டு அத்தடுப்பூசிகளைத் தயாரித்திருந்த நிறுவனங்கள் அண்மையில் விண்ணப்பித்தன. அதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு,  கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரைத்தது.

 

அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு நிபந்தனைகளுடன் முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த ஒப்புதலால், மருந்து கடைகளில் இத்தடுப்பூசிகள் விற்பனைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகள் தேவையான தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளில் 25 சதவீத தடுப்பூசிகளை வாங்குவதற்கு மட்டுமே தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்