Skip to main content

"தன்னலமின்றி உழைத்தால் சோர்வே வராது" -பிரதமர் நரேந்திர மோடி!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

FIT INDIA FIRST YEAR ANNIVERSARY PM NARENDRA MODI VIDEO CONFERENCE SPEECH

 

 

‘ஃபிட் இந்தியா இயக்கம்' தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர் ராஜிவ்தத் திவாகர் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (24/09/2020) காணொளி மூலம் உரையாற்றினார்.

 

அப்போது, "பேராசை இல்லாமல் பிறருக்காக, தன்னலமின்றி உழைத்தால் ஒருபோதும் மனச்சோர்வு வராது. மாறாக தனி சக்தி கிடைக்கும். உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும். வாழ்க்கை முறைகளில் ஆரோக்கியமான உணவு என்பது ஒரு அங்கமாகி விட்டதால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உடல்தகுதி திறனுடன் இருக்க சிறிது கட்டுப்பாடு மட்டுமே போதுமானது" என்றார்.

 

இந்த காணொளி நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்