கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது பிரவம் என்ற கிராமம். இங்கு ஆபிரஹாம் என்பவருக்கு பியான் என்ற பெயரில் 3 வயது குபழந்தை உள்ளது . வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன், அருகிலிருந்த அலுமினிய பானையை எடுத்து விளையாடினான். அப்போது தனது தலையில் கவிழ்த்து பார்க்க ஆசைப்பட்டுள்ளான். இந்த முயற்சியில் தான் விபரீதம் நிகழ்ந்துள்ளது. தலையில் மாட்டிய பானை அப்படியே சிக்கிக் கொண்டது. அதனை வெளியே எடுக்க முடியாமல் தவித்துள்ளான். இதையடுத்து அழத் தொடங்கினான்.
இந்த சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது மகனின் தலையில் பானை சிக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதனை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பின்னர் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்களாலும் பானையை எடுக்க முடியவில்லை. அதற்குள் சிறுவன் பியானின் அழுகை அதிகமானது. பின்னர் சிறுவனை தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வீரர்கள் பானையை அகற்றும் முயற்சியில் இறங்கினர். இரும்பை வெட்டி எடுக்கும் கருவியை கொண்டு பானையை வெட்டி எடுத்தனர். இதில் சிறுவனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படி விபரீதமாக விளையாடக் கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறி பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.