Skip to main content

டெல்லி போராட்டத்தில் இருந்து விலகும் விவசாய அமைப்புகள்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

vm singh

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயக் குழுக்களில் ஒன்றான ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன், போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.  இதுகுறித்து ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங், "வேறுவகையான நோக்கம் கொண்டவர்களுடன் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வி.எம்.சிங்கும், ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதனும் உடனடியாக போராட்டத்திலிருந்து விலகுகிறோம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால், எங்களது போராட்டம் இந்த வடிவத்தில், என்னோடு தொடராது. மக்களைத் தியாகம் செய்யவோ அல்லது அடிவாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பாரதிய கிசான் யூனியன் (பானு) என்ற அமைப்பும் போராட்டத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர், டெல்லியில் நேற்று நடந்தவற்றாலும், எங்களின் 58 நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாலும் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்