Skip to main content

5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரைக்கான கட்டுப்பாடுகள்  நீட்டிப்பு!  

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

 Extension of campaign restrictions in 5 states!

 

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரணி, நேரடி பரப்புரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரை கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

 

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் கட்டுப்பாடுகள் நீட்டிப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவாக தற்பொழுது ஜனவரி 22ஆம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாடுகளை  நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்