தமிழகம் உள்ளிட்ட ஐந்து சட்டசபை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலம், உத்தர் சட்டசபை தொகுதியின் உலுபீரியா பகுதி திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த ஒரு தலைவரின் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், வி-பேட் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளம்பியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதியில் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட துறை அலுவலரும் (sector officer), அவருக்கு கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது மாற்று (reserved) வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்றும், அது தற்பொது தேர்தல் நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.