Skip to main content

'வாஜ்பாயின் மரணத்தில் சந்தேகம்...'-சிவசேனா

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
sanjay

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் உட்பட பல தேசிய தலைவர்கள்  அஞ்சலி செலுத்தினர்.

 

அவரது மறைவை அடுத்து பாஜக தலைமை அவரது அஸ்தி நாடுமுழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து அவர்களுக்கு வாஜ்பாயின் அஸ்தி வழங்கி, நதிகளில் கலக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் வாஜ்பாயின் மரணத்தில் சிவசேனா கட்சி திடீர் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவிக்கையில் ”முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் இறந்தாரா என்ற சந்தேகம் உள்ளது. ஆகஸ்ட் 12, 13 தேதிகளிலேயே அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது மரணம் முன்னதாக நடந்தால் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கும் என்பதால், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட முடியாத சூழல் ஏற்படும். சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் வாய்ப்பு நழுவி விடக்கூடாது என்பதற்காகவே வாஜ்பாய் மரண அறிவிப்பு மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது’’என்றார்.

 

சார்ந்த செய்திகள்