Skip to main content

குடிப்பதற்கு குறைந்தபட்ச வயது என்பது நிர்ணயிக்கப்படவில்லை- தீர்ப்பளித்த நீதிமன்றம்...

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி மது வாங்குவதற்கு மட்டுமே குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், குடிப்பதற்கு என எந்த வயதும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

wines

 

 

டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23ஐ எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், “டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ன்படி டெல்லியில் ஒருவர் மது வாங்கவும் குடிக்கவும் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் குறைந்த வயதுடையவர்களும் மது குடிக்கின்றனர்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனுவுக்கு பதிலளித்த நீதிபதிகள்  “மனுதாரர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ஐ தவறாக புரிந்து கொண்டுள்ளார். இந்தச் சட்டத்தில் மது வாங்குவதற்கு மட்டும் தான்  25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மது குடிப்பதற்கு என குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே இந்தப் பிரிவில் எந்தவித தவறும் இல்லை. எனவே இந்தப் பிரிவு நாங்கள் நீக்க தேவையில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்