Published on 21/02/2019 | Edited on 21/02/2019
புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது. மேலும் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஹரூன் யூசுப் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருது ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடிக்க முடியும். ஆனால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை' என கூறியுள்ளார்.