Skip to main content

இந்தியாவில் 62 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு... மஹாராஷ்டிராவில் 779 பேர் உயிரிழப்பு!!! 

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
 Corona crosses 62 thousand in India, 779

 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. 

இன்று (10/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662-லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981- லிருந்து 2,109  ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847- லிருந்து 19,358 ஆக அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20,228  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 779 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்