Skip to main content

"அரசியல் சாசனத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"The Constitution must be fully complied with" - Prime Minister Narendra Modi's speech!

 

1946ஆம் ஆண்டில் இதே நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையொட்டி இந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாட மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி ஆண்டுதோறும் இந்த அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

 

அந்தவகையில், இன்று (26/11/2021) அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாந் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தை வணங்கும் தினம் இன்று. அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை நாம் எப்போதும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. உட்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றாத கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காக்கும்? என்று கேள்வி எழுப்பிய பிரதமர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன; இது ஜனநாயகத்துக்கு எதிரானது. 

 

இந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்