Skip to main content

தமிழகத்தில் இருந்து எம்.பி ஆகிறாரா மன்மோகன் சிங்?

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


இந்திய முன்னாள் பிரதமரும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஜூன் மாதம் 14- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் , திமுக சார்பில் சீட் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது அசாம் மாநிலத்தில் இருந்து ஐந்தாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர் . ஆனால் தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அதே போல் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சட்டமன்ற உறுப்பினர்களே உள்ள நிலையில் மன்மோகன்சிங் மீண்டும் அந்த மாநிலத்தில் ராஜ்ய சபா எம்.பி ஆவது சாத்தியமில்லாதது என காங்கிரஸ் கட்சிக் கருதுவதால் , அந்த கட்சியின் பார்வை தமிழகம் மீது திரும்பியுள்ளது.

 

 

CONGRESS

 

 

ஏனெனில் தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையும் நிலையில்   திமுக கட்சியிடம் மன்மோகன் சிங்கிற்கு  காங்கிரஸ் கட்சி சீட் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை திமுக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு சீட் வழங்காவிட்டால் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி ஆவதற்கு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் அந்த வருடத்தில் சுமார் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது . அதில் காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கும். அப்போது தான் மன்மோகன் சிங்கிற்கு  ராஜ்ய சபா எம்.பி ஆக வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 

 

சார்ந்த செய்திகள்