Skip to main content

சவுக்கால் அடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்! 

Published on 25/10/2022 | Edited on 27/10/2022

 

The Chief Minister of Chhattisgarh was whipped!

 

தீபாவளி பண்டிகை நாள் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் காலை முதல் இரவு வரை மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். பல்வேறு இடங்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடந்தன. 

 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தீபாவளியை முன்னிட்டு கௌரி-கௌரா எனும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் பங்கேற்றார். அதில் அவர் மத வழிப்பாட்டு சம்பிரதாயமாக தன் கையில் சவுக்கால் அடி வாங்கினார். முதலமைச்சர் பூபேஷ் பாகல் கையில் அடிவாங்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்