Skip to main content

“ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ போன்றவர்”- கொந்தளித்த சந்திரபாபு நாயுடு 

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

இந்த வருடம் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதனையடுத்து ஜெகன்மோகன் ஆந்திராவின் முதலமைச்சராகினார். அதன்பின் பல நடவடிக்கைகள், அறிவிப்புகள் என்று ஆந்திர அரசியலில் சிறப்பு பெற்று வருகிறார்.
 

chandrababu naidu

 

 

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

விசாகப்பட்டினம் சென்ற சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற சட்டவிரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. தேவையற்ற பிரச்சினைகளை போலீசார் உருவாக்குகின்றனர். என்னிடம் நல்ல முறையில் இருப்பவர்களிடம் மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன். 

ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. கட்சித்தலைவர்கள் ஜெகன் வரியை வசூலிக்கின்றனர்.  

பல முதல் மந்திரிகளை நான் பார்த்துள்ளேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு மோசமான முதல்வரை நான் பார்த்தது இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அரசு தனது ஆணவப்போக்குடன் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  எங்கள் கட்சித்தலைவர்களை குறிவைத்து அரசு செயல்படுகிறது. இது நியாயமற்றது” என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்