Skip to main content

கிரண்பேடியை திரும்பப்பெற கோரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
kp

 

புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடியை திரும்பப்பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசும்,  புதுச்சேரி அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுனரை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அரசு பணத்தை வீணாக்கவே துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுவது தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தை மீறி புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி செயல்படுகிறார் என்பதால் அவரை திரும்பபெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், அரசு நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையீடு என்பது கிரன்பேடி எடுத்துக்கொண்ட பதவிபிரமானத்தை மீறும் வகையில் செயல்படுவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கை, பசுமை தீர்ப்பாய வழக்கு, அதிகாரி மாற்றம் செய்யும் தலைமை செயலாளர் உத்தரவு ஆகியவற்றில் தலையிட்டு அரசியலமைப்பு விதிகளையும், பதவிப்பிரமான விதிகளையும் மீறியிருக்கிறார் என முருகன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஆளுனர் மாளிகையான ராஜ் நிவாசில் ஆளுனருக்கான தனிச்செயலாளரும், 68 பணியாளர்களும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியில் உள்ள நிலையில், தனக்கு தேவையான ஆட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூடுதலாக பணியாளர்களை நியமித்து விதிகளை மீறியுள்ளதாக மனுவில் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சி.ட்டி.செல்வம், என்.சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தபோது "டெல்லி ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என மனுதாரர் முருகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.

 

இதேபோல 2011ல் துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது இதே மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் வி.வெங்கடேசன் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

 

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும், புதுச்சேரி அரசும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்