Skip to main content

ஆளுநர் உரை புறக்கணிப்பு... கருப்பு சட்டையுடன் திமுக வெளிநடப்பு!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

 Boycotting Governor's speech... DMK walk out with black shirts!

 

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது.

 

'ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வதிலும், பொருளாதார மேம்பாட்டை அளவு செய்வதிலும் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியானது முக்கிய குறியீடாக உள்ளது என்பதை உறுப்பினர்களுடன் நான் பகிர விரும்புகிறேன். ஒரு மாநில பொருளாதாரத்தின் முழுமையான மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் ஆகிய இரண்டையும் தீர்மானிக்க தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தி பயன்படுகிறது'' எனத் தமிழிசை அவரது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

 

இக்கூட்டத்திற்கு கருப்பு சட்டையுடன் வந்த திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை உரைநிகழ்ந்தி கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி  வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்