Skip to main content

கரோனாவால் பாஜக எம்.பி மரணம் - பிரதமர் இரங்கல்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

NAND KUMAR SINGH CHAUHAN

 

மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் சவுகான். பாஜகவைச் சேர்ந்த இவரின் உடல்நிலை சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (02.03.2021) அவர் மரணமடைந்தார்.

 

நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கண்ட்வாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஸ்ரீ நந்த்குமார் சிங் சவுகான் ஜி மறைவால் வேதனையடைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவரது பங்களிப்பு, அவரின் ஒருங்கிணைப்புத் திறன்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்