Skip to main content

சுவரில் மலர்ந்த தாமரை! 

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

பாஜக தொடங்கப்பட்ட தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று நாடு முழுவதும் பாஜகவினர் 44வது நிறுவன தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் கட்சியின் சின்னமான தாமரையை சுவர்களில் வரையும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

 

அந்த வகையில் டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சுவரில் தாமரையை வரைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜகவின் நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் சுவரில் தாமரை வரையும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதனை அனைத்து மாநிலத் தலைவர்களும் மேற்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

 

இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தி.நகரில் உள்ள பாஜக  தலைமை அலுவலகம் அருகே உள்ள சுவரில் கட்சியின் தாமரை சின்னத்தை வரைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இனி வரும் காலங்களில் தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும். பிரதமரின் மற்றும் நமது தேசியத் தலைவரின் தொலைநோக்கு பார்வைகள் அடிமட்ட மக்கள் வரை சென்றடைவதை விரும்புகிறோம். தமிழகத்தில் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டு 2026ல் ஆட்சிக்கு வர வேண்டும் இதுவே எங்களின் நோக்கம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்