Skip to main content

டயர், டியூப் இல்லாத காங்கிரஸ் கட்சி! - பாஜக அண்ணாமலை கிண்டல்

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

gjh

 

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பாஜக கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் கருநகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "எப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் முரசொலி பத்திரிகையில் ‘இந்தியாவின் அடுத்த ஆளுமை நம்முடைய தளபதி’ என்று சொன்னாரோ, அப்போதே தமிழக காங்கிரஸ் கட்சி செயலிழந்துவிட்டது. டயர், டியூப் கூட இல்லாத கட்சியாக உள்ளது. பீட்டர் அல்ஃபோன்ஸ் திராவிட முன்னேற்றக் கட்சியின்  நாளிதழில் ஸ்டாலின்தான் அடுத்த இந்தியாவின் ஆளுமை என்று சொன்னாரோ, அப்போது அவரே ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. எங்களுக்கு உண்மையான சமூகநீதி என்றால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். உண்மையான சமூகநீதிக்கு வித்திட்டவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. 

 

அவர் பிறந்தநாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. பாமக, அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்காக தனித்துப் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்போம். பாஜக கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்