Skip to main content

சிலையாக உருமாறத் தயாராகும் பாபா ராம்தேவ் !!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

paparamdev

 

 

 

லண்டனிலுள்ள மேடம் தசாண்ட் என்ற மெழுகுசிலை அருங்காட்சியகம் உலக புகழ் பெற்ற ஒன்று. மெழுகு சிலைக்கு உருவாக்கம் மற்றும் காட்சிபடுத்துதல் போன்றவற்றில் புகழ் பெற்ற அந்த நிறுவனம் இதுவரை அப்துல் கலாம், மோடி ,சச்சின், அமிதாப், விராட் கோலி, ரித்திக், ஷாருக்  எல்லா பிரபலங்களையும் தத்ரூப மெழுகு சிலையாக உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் அந்த நிறுவனம் யோகா குருவாகவும், பதஞ்சலி ப்ரொடெக்ட் நிறுவனத்தின் நிறுவனரான இருக்கும் பாபா ராம்தேவ் சிலையை தத்ரூபமாக வடிமைக்க உள்ளது.

 

 

 

இது தொடர்பாக லண்டன் சென்ற பாபா ராம்தேவை சந்தித்து மெழுகு சிலைக்கு தேவையான அளவீடுகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்துள்ளது அந்த நிறுவனம். இதுப்பற்றி அந்த மெழுகுசிலை வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகையில் இந்த சிலையை 20 பேர் கொண்ட குழு முழு சிரத்தையுடன் தத்ரூபமாக வடிவமைக்க இருக்கிறோம். அது மட்டுமின்றி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என எல்லோருக்கும் சிலை உருவாக்கிய நாங்கள் ஒரு துறவிக்கு உருவாக்கும் முதல் சிலை இதுதான் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த சிலையில் பாபா ராம்தேவ் விர்க்ஷாசனா எனும் ஆசனம் செய்யும் வடிவில் வடிவமைக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல் இந்த சிலை பற்றி பாபாராம்தேவ் கூறுகையில் இது எனக்கான சிலை அல்ல யோகாவிற்கும், ஆன்மீகத்திற்கும் உலகளவில் கிடைத்த மற்றோரு அங்கீகாரம் என குறிப்பிட்டார்.   

சார்ந்த செய்திகள்