Skip to main content

காவிரி ஆணையத்தை எதிர்த்து மேல்முறையீடு!! கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு !!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018

 

KAVIRI

 

 

 

காவிரி பிரச்சனை தொடர்பாக நேற்று நடந்த கர்நாடக மாநிலத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் காவேரி பிரச்சனையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும், நாடாளுமன்றத்தில் பிரச்னையை பற்றி கேள்வி எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நேற்று கர்நாடகாவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலோனை அந்தக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.

 

இந்தக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவந்தற்கு குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து, அதாவது மத்திய அரசின் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கான சட்ட விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் இது பற்றி கர்நாடக அரசு தரப்பில் கேள்வி எழுப்ப இருப்பதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

நாளை நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் அந்த கூட்டத்தில் காவிரி குறித்து கர்நாடகாவின் உரிமையை பெறுவதற்கான  நிலைப்பாட்டை கர்நாடக உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் முன்வைப்பார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

சார்ந்த செய்திகள்