Skip to main content

திவாலான அம்பானி...

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

dfgvdszf

 

நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தம்பியான அணில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் என அறிவிக்க விண்ணப்பித்துள்ளார். அணில் அம்பானியின் ஆர்.காம் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வந்தது. இந்த நிறுவனம் 7 பில்லியன் டாலர் அளவில் கடன் உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

அதன் பிறகு கடன் கொடுத்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அணில் அம்பானி சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றார். ஆனால் சொத்துக்களை விற்க முடியாததால் தற்போது நிறுவனம் திவால் என அறிவிப்பதற்காக அவர் விண்ணப்பித்துள்ளார். இதற்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுக அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒருகாலத்தில் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது கடனில் முழ்கி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு துறைக்கு முக்கியமான ஒன்றான ரபேல் விமான உற்பத்தி பொறுப்பு இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது சகோதரரின் நிறுவனமான ஜியோ இந்தியாவின் மிக பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக தற்போது உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்