Skip to main content

காற்று மாசுபாடு - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019


டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து உள்ளது. அங்கு நிலவும் கடுமையான காற்று மாசு சீர்கேடு குறித்து  உச்சநீதிமன்ம்  தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடங்கியதும் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் புரேலால், உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டெல்லியில் காற்று மாசு சீர்கேடு குறித்த விரிவான அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது, " காற்று மாசு காரணமாக டெல்லி நகரமே மூச்சடைத்துக் கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பாதிப்பு உண்டாகிறது. நாகரிகம் அடைந்த நாட்டில் இது எப்படி சாத்தியமாகிறது? ஒரு மனிதனுக்கு வாழும் உரிமை மிகவும் முக்கியமானது. நம்முடைய காய்ந்த பயிர்களை எரித்து அடுத்தவர்களை சாகவிடுகிறோம்.

இதுபோன்று ஒரு நகரத்தில் காற்று மாசுடன் யாரும் வாழ முடியாது. மாநில அரசு இது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்கள் தங்கள் பொறுப்பை மத்திய அரசின் மீது சுமத்துகிறார்கள். இப்போது டெல்லி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். டெல்லிக்கு வரும் மக்களை இப்போது வரவேண்டாம் என்று சொல்லும் நிலையில் இருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பு? மாநில அரசுகள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நாம் ஒவ்வொன்றையும் கேலிக்கூத்தாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.மமேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களிடம், " காய்ந்த பயிர் தட்டைகளை எரிப்பதை தடுப்பதற்கு தீர்வு என்ன? டெல்லி மட்டுமல்ல. உங்கள் மாநிலங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்