Skip to main content

தமிழ் மொழியிலும் பி.இ. படிக்க ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

AICTE PERMISSION GRANTED THE STATE LANGUAGES BE COURSES

 

தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, கன்னடம் உட்பட ஏழு பிராந்திய மொழிகளில் பொறியியல் (பி.இ.) பாடங்கள் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏ.ஐ.சி.டி.இ.யின் அனுமதியால் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த பி.இ. பாடங்கள், தமிழகத்தில் இனி தாய்மொழியான தமிழில் இடம்பெறும். தமிழில் படிக்கலாம் என்பதால் கிராமப்புற மாணவர்களும் பொறியியல் படிப்பைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவர். அதேபோல், பொறியியல் படிப்பைத் தாய்மொழியில் எளிதாக புரிந்துகொண்டு மாணவர்கள் படிக்கலாம். இதனால் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்