Skip to main content

"அபிநந்தன் மட்டும் ரபேலில் பாகிஸ்தான் விமானங்களை விரட்டியிருந்தால்.." - முன்னாள் தளபதி பேச்சு!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கிக்கொண்டார். சில நாட்கள் இடைவெளியில் அவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது. 



இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தனாவோ பேசும்போது, " அபிநத்தன் மிக் 21 ரக விமானத்தில் சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியதற்கு பதிலாக, அப்போது ரபேல் போர் விமானம் பயன்பாட்டில் இருந்து, அதில் அவர் பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்றிருந்தால் பாகிஸ்தானின் கதையே வேறாக இருந்திருக்கும் என்றார். மிக் 21 ரக விமானங்கள் பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்