Skip to main content

மொத்தவிலை வர்த்தகத்தில் பணவீக்கம் 5.13% உயர்வு...!

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

 

ii

 

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி மொத்தவிலை வர்த்தகத்தில் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 4.53 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 13-ஆம் தேதி அன்று வந்த அறிக்கையின்படி செப்டம்பர் மாதத்தின் சில்லறை வர்த்தகத்தின் பணவீக்கம் 3.77% என உயர்ந்ததாகவும். இது ஆகஸ்ட் மாதம் 3.69% என இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்றவையே இதற்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.

சார்ந்த செய்திகள்