Skip to main content

மாயாவதி உதவியாளரிடம் 225 கோடி சொத்து...வருமான வரி துறை அதிரடி முடிவு...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

உத்திரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற நெட் ராம் ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் லக்னோ நகரங்களில் உள்ள இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

 

mayawati

 

அப்போது சொகுசு கார்கள், தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என 225 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டாத சொத்துக்கள் கண்டறியப்பட்டன. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்தவர் இவர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனக்கு ஒரு சீட் வேண்டும் என கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  

இதனை தொடர்ந்தே வருமான வரி துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக வருமான வரித்துறை தற்போது முடிவெடுத்துள்ளது .

 

 

சார்ந்த செய்திகள்