Skip to main content

குஜராத் கோர விபத்தில் 15 பேர் பலி... பிரதமர் மோடி இரங்கல்..!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

15 passes away in Gujarat road accident ... PM Modi condoles ..!


குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி, லாரியைவிட்டுவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 


இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்