Skip to main content

கருக்கலைப்பு மறுக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
கருக்கலைப்பு மறுக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

ஜார்க்கண்ட் மாநிலம் சண்டிகரில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு, கர்ப்பமடைந்த 10 வயது சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி இந்த சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு சண்டிகர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் ஜே.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன்பும் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. 

முன்னதாக மருத்துவக்குழுவின் அறிக்கையைக் கேட்டிருந்த உச்சநீதிமன்ற அமர்வு, அறிக்கைக்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்க மறுத்தது. கருக்கலைப்பு செய்தால் அந்த சிறுமியின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று காரணமாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அறுவைச்சிகிச்சை மூலமாக அந்த சிறுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை மருத்துவர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த 10 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களாக, அவரது மாமா தொடர் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதே கர்ப்பத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். இந்தியாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களில் 96%, பாதிப்பிற்குள்ளாகும் பெண்களுக்கு சம்பந்தப்பட்டவர்களாலேயே நிகழ்த்தப்படுவதாக, தேசிய குற்றப்பத்திரிகை அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்