Skip to main content

சன்னிலியோனை புகழ்ந்தால் 10 சதவிகிதம் ஆஃபர்... இப்படியும் ஒரு சிக்கன் கடை!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

SHOP

 

ஒரு ரூபாய்க்கு ஒரு பிரியாணி, தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என இப்படி எத்தனையோ ஆஃபர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை சன்னிலியோனின் ரசிகராக அவரைப் புகழ்ந்தால் 10 சதவிகிதம் ஆஃபர் என்ற வினோத யுத்தியைக் கடைபிடித்து வருகிறது ஒரு சிக்கன் கடை.

 

SHOP

 

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ளது இந்த விநோத சிக்கன் கடை. மாண்டியாவில் பிரசாத் என்ற இளைஞர் வைத்திருக்கும் சிக்கன் கடையில் வாங்கும் சிக்கனுக்கு 10 சதவிகிதம் ஆஃபர் வேண்டுமென்றால் ஆஃபரை பெறும் வாடிக்கையாளர் தீவிர சன்னிலியோனின் ரசிகராக இருக்க வேண்டும். அப்படி கடைக்கு ஆஃபர் கேட்டு வரும் வாடிக்கையாளர் உண்மையிலேயே சன்னிலியோனின் ரசிகர்தானா என உறுதிப்படுத்த சில நிபந்தனைகளையும் அவரே விளம்பர பலகையில் வைத்துள்ளார். அதன்படி, 10 சதவீதம் ஆஃபர் கேட்டு வரும் வாடிக்கையாளர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் சன்னிலியோனை பின்தொடர வேண்டும். மொபைல் போனில் குறைந்தபட்சம் 10 சன்னிலியோன் புகைப்படங்கள் வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்குமாம்.

 

இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் 'என்னத்த சொல்ல இப்படியும் ஒரு சிக்கன் கடையா?' என கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்