Skip to main content

ஸ்டாலின், சந்திரசேகரராவ் சந்திப்பு தொடங்கியது... அடுத்த சந்திப்பு இவருடனா???

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்திப்பு தொடங்கியது. இந்த சந்திப்பு, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெறுகிறது.
 

 stalin chandra sekararao


உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்ததைத் தொடர்ந்து, இன்று அவர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது மூன்றாம் அணிக்கான முயற்சிதான் எனவும், அடுத்ததாக, கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்