Skip to main content

ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ் - எடப்பாடிக்கு பாஜக கொடுத்த கிரீன் சிக்னல்

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
ep

 

சமீப காலமாக ஓபிஎஸ் தொடர்பான விவகாரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்படத்தொடங்கியுள்ளன.    இதற்கு ஒரு பின்னணி உண்டு.   ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான் நல்லது என எடப்பாடி நினைக்கிறார்.     இதற்கு பாஜகவும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.  

 

 ஒரு காலத்தில்  பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை தற்போது பாஜக கழட்டிவிட்டது.    அவர்கள் கட்டளைப்படி எடப்பாடியும் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கியுள்ளார்.   அதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என திரண்ட அதிமுகவினரை ஓபிஎஸ் அணி திரட்ட துவங்கியுள்ளார்.  ஒவ்வொரு கிராமமாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த ஓபிஎஸ் மீதான தாக்குதலை அதிகமாக்கியுள்ளார் எடப்பாடி.    இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறது அதிமுக வட்டாரம்.  

 

இறுதியாக, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டால் அவர் எங்கு செல்வார் என்கிற கேள்விக்கு,  பாஜகவை எதிர்த்து ஓபிஎஸ் கொடி பிடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்