Skip to main content

காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்த தடை!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
police


 

பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்துகிறார்கள் என வந்த புகாரின் பேரில் டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதை சுற்றறிக்கையின் வாயிலாக வெளியிட்டுள்ளது. அதில், 
 

உதவி ஆய்வாளர் பதவிக்குமேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம். சட்டம் ஒழுங்கு, விவிஐபி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் செல்ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது, மேலும் செல்ஃபோன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது, தடை விதிப்பது தொடர்பாக அந்தந்த பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியிலுள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்