Skip to main content

ராணுவத்துக்கு ஆறு மாசம்! ஆர்.எஸ்.எஸ்.க்கு மூணே நாள்! - மோகன் பாகவத்

Published on 12/02/2018 | Edited on 20/02/2019

போர் வந்தால் இந்திய ராணுவத்துக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். தயாராகி விடும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

 

Mohan

 

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘இந்தியா ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் பட்சத்தில், அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுத்தால், ஆர்.எஸ்.எஸ். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும். இந்திய ராணுவம் போருக்குத் தயாராக ஆறேழு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணுவமாக ஒன்றுகூட மூன்றே நாட்கள் போதும்’ என பேசியுள்ளார்.

 

மேலும், ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு குடும்ப அமைப்பாக செயல்பட்டாலும், ராணுவத்திற்கு இணையான ஒழுக்கத்துடனும், ஆயத்த நிலையுடனும் இருக்கிறது. தேசம் பிரச்சனையைச் சந்திக்கும்போது உயிரையும் விடுவதற்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்தியா இந்து தேசமாகும்போது அதில் ஆர்.எஸ்.எஸ்.க்கான தேவை இருக்காது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருடனும் நண்பர்களாக அப்போது பழகிக் கொண்டிருப்பார்கள்’ என பேசியுள்ளார்.

 

மோகன் பாகவத்தின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுன்ஜே திவாரி, ‘இந்திய ராணுவம் அதன் ஒப்பற்ற தியாகங்களால் மிகப்பெரிய பெருமைகளைக் கொண்ட நிறுவனம். அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

 மனரீதியாக துன்புறுத்தப்பட்ட அபிநந்தன்?

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

    

 

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் மனரீதியாக  துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

n

 

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்ட  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.   அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அபிநந்தன் கூறியதாக முன்னர் வெளியான வீடியோ பதிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. நல்லமுறையிலும், கண்ணியமாகவும் பார்த்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று  தகவல் வெளியிட்டுள்ளது. 


 

Next Story

பிரனாப் மற்றும் மோகன் பாகவத் எண்ணங்கள் ஒன்றே! - ராம் மாதவ்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

பிரனாப் மற்றும் மோகன் பாகவத்தின் எண்ணங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
 

pranab

 

 

 

கடந்த ஜூன் 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அந்த அழைப்பை ஏற்றிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரனாப் முகர்ஜி தேசம், தேசியவாதம், தேசப்பற்று குறித்து பேசினார். 
 

ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ரந்தீப் சர்ஜீவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரனாப் முகர்ஜியின் உரையை வெகுவாக பாராட்டி இருந்தாலும், பலர் பிரனாப் கலந்துகொண்டதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். 
 

 

 

இந்நிலையில், பிரனாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துகொண்டது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ், ‘ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே வெளிப்படையான அமைப்பாக இருந்து வருகிறது. அது முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததின் பேரில், அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் பெரும்பான்மையானவை மோகன் பாகவத்தின் எண்ணங்களை ஒத்திருந்தன. அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகள்தான் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன’ என தெரிவித்துள்ளார்.