கோவையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தப்போது,
டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலைவிட பா.ஜ.க அதிகப்படியான வாக்குகள் மற்றும் 5 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. ஆனால் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் திறமைசாலி. நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர். அவர் ஓட்டும் கார் ரேசுக்கு தகுந்த கார் அல்ல. 50 ஆண்டு பழமையான கார். 4 டயர் இல்லாத தி.மு.க. என்ற காருக்கு அவர் டிரைவராகி இருக்கிறார். கலைஞரின் திறமைகளை, துரைமுருகன் போன்றவர்களின் தேர்தல் அணுகுமுறைகளை இப்போது தி.மு.க. பயன்படுத்தவில்லை.
எங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த பகையும் இல்லை. யார் போவதாக இருந்தாலும் நெய்வேலியில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி நிர்வாகம் சினிமா சூட்டிங்கிற்கு மந்திரியை கேட்டு அனுமதி கொடுக்கவில்லை அந்த நிர்வாகமே கொடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அங்கு ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் நடைமுறைபடுத்துவதை மக்கள் யோசிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.