Published on 14/02/2019 | Edited on 14/02/2019
மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் சென்னை வந்தார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து தமிழக அமைச்சர் தங்கமணியுடன் ஆலோசிக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தொழிலபதிபர் மகாலிங்கத்தின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.