Skip to main content

"உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது" - அஜித் குறித்து பிரபல நடிகை கருத்து

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

actress kushbu tweet about ajithkumar

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் நேற்று (24.2.2022) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்  வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் 'வலிமை'யை கொண்டாடி வருகின்றனர்.  'வலிமை' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் கட்சிகளும் அஜித் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இருப்பினும் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

அந்தவகையில் நடிகை குஷ்பூ வலிமை படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," என்னுடைய ஜார்ஜ் க்ளோனி தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வலிமை படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்