Skip to main content

“திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த கடத்தல்” – ‘யூகி’ விமர்சனம்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

yuki tamil movie review

 

வாடகைத்தாய் விவகாரம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பான பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த நடைமுறை பல்வேறு வருடங்களாக மிகப்பெரிய பணக்காரர்களிடமும், நடிகர்களிடமும் இருந்து வந்தாலும் தற்போது முன்னணி நடிகைகள் சிலர் இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ட்ரெண்டிங்காகி வருவதன் காரணத்தினால் வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட படங்கள் சமீப காலங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் மீண்டும் ஒரு வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட படமாக வெளியாகி இருக்கும் இந்த யூகி திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? இல்லையா?

 

ஒரு சாலையின் ஓரத்தில் மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருக்கும் நிறைமாத கர்ப்பிணியான கயல் ஆனந்தி திடீரென அந்தப் பக்கமாக வரும் ஒரு காரில் கடத்தப்படுகிறார். இவரை கண்டுபிடிக்க போலீஸ் டிஎஸ்பி பிரதாப் போத்தன் பிரைவேட் டிடெக்டிவ் நரேனை நியமிக்கிறார். இவருக்கு உதவியாளராக சஸ்பெண்டில் இருக்கும் போலீசான கதிரை அனுப்பி வைக்கிறார். இவர்களின் குழு காணாமல் போன கயல் ஆனந்தியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது. இன்னொரு பக்கம் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் நடிகர் நட்டியும் அதே பெண்ணை தன் டீமுடன் இணைந்து தேடி வருகிறார். இவர்களின் கையில் கயல் ஆனந்தி சிக்கினாரா, இல்லையா? கயல் ஆனந்தியை கடத்தியது யார்? அதற்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் மர்மங்கள் என்ன..? என்பதே யூகி படத்தின் மீதி கதை.

 

படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் துப்பறியும் காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி உள்ளார் இயக்குநர் ஸாக் ஹாரிஸ். இதையடுத்து இரண்டாம் பாதியில் பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து யார் யார் எதற்காக யாரைத் தேடுகிறார்கள் என்பதை குழப்பம் இன்றி கொடுத்த இயக்குநர் அதை இன்னமும் சுவாரசியமாக கொடுத்து இருக்கலாம். குறிப்பாக முதல் பாதி முழுவதும் வெறும் துப்பறியும் காட்சிகளை மட்டுமே வைத்து, இரண்டாம் பாதியில் நேர்த்தியான திரைக்கதை மூலம் முடிச்சுகளை அவிழ்த்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் முதல் பாதி திரைக்கதையில் இன்னமும் சுவாரசியத்தை கூட்டி இருந்தால் இந்த படம் நிச்சயம் கவனிக்கப்படும் படமாக அமைந்திருக்கும். நல்ல விறுவிறுப்பு ஏற்படும்படியான ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் அதை குழப்பம் இல்லாமல் கொடுக்க எடுத்த சிரத்தை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டி இருந்திருக்கலாம்.

 

குறிப்பாக படத்தில் மூன்று நாயகர்கள். மூன்று நாயகர்களில் முதன்மை நாயகனாக நரேனை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்த இயக்குநர் பிற்பகுதிகளில் நடிகர் கதிரை முன்னிறுத்தி அதன் மூலம் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். ஆனாலும் மூன்றாம் நபரான நட்டியின் கதாபாத்திரத்தை குழப்பம் நிறைந்ததாகவே அமைத்து கடைசியில் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து அந்த விளக்கம் எந்த ஒரு அதிர்வலைகளையும்  ஏற்படுத்தாதது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. ஆனாலும் நரேன், கதிர், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், ஜான்விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நான் லீனியரில் அமைந்து காட்சிகளுக்கு சுவாரசியத்தை ஆங்காங்கே கூட்டவும் செய்துள்ளது. அதுவும் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் அது அழுத்தமாகவும் சற்று விறுவிறுப்பாகவும் அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து இருக்கிறது. 

 

படத்தின் முதல் நாயகன் நரேன் தனக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளில் சட்டுலான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதற்கு உதவி புரிந்துள்ளார். இவருக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் வரும் கதிர் தேவைப்படும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இன்னொரு பக்கம் துப்பறியும் கதாபாத்திரத்தில் வரும் நட்டி ஏன் வருகிறார், எதற்காக வருகிறார் என்பது தெரியாத அளவுக்கு குழப்பம் நிறைந்ததாகவே இருந்தாலும் அவருக்கான வேலையை திடமாகவும், சிறப்பாகவும் செய்து விட்டு சென்று இருக்கிறார். டாக்டராக நடித்திருக்கும் நடிகை வினோதினி வைத்தியநாதன் எப்போதும் போல் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தி உள்ளார்.

 

பரிதாபமான நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் கயல் ஆனந்தி. இவரின் இயல்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு இயல்பை கூட்டி பார்ப்பவர்களை கலங்கச் செய்துள்ளது. சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் நடிகர் பிரதாப் போத்தன் தன் அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றுள்ளார். அதிரிபுதிரி வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான வில்லத்தனம் காட்டி விட்டு சென்றுள்ளார். இவரின் கதாபாத்திரம் காட்சிகளை நகர்த்துவதற்கு உதவியாக இருப்பது படத்திற்கு சற்று பலம் கூட்டி இருக்கிறது.

 

படத்தில் சின்ன சின்ன பாடல்கள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் பின்னணி இசையில் சற்று படத்தை தாங்கிப் பிடிக்க முயற்சி செய்து உள்ளார் இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜ். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பல்வேறு திருப்பங்களுடன் இரண்டாம் பாதியில் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தாலும் அதை முதல் பாதியிலும் செய்திருந்தால் இப்படம் குறிப்பிடத்தக்க படமாக மாற நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.

 

யூகி - எளிதில் யூகிக்கும்படி இல்லை!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாபெரும் மதிப்பை பெறுகிறாரா? - ‘மகாராஜா’ விமர்சனம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Vijaysethupathi's maharaja movie review

சில ஆண்டுகளாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காத விஜய் சேதுபதி அதை மீட்டெடுக்க போராடி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதி இருந்தால் அந்தப் படம் வெற்றியும், அதுவே அது விஜய் சேதுபதி படம் என்றால் படம் தோல்வி அடைவதுமாய் ஒரு ட்ரெண்ட் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் சறுக்கல்களில் இருந்து மீண்டு எழுந்து மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்ப கோதாவில் மகாராஜாவாக குதித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த மஹாராஜா திரைப்படம் மகுடம் சூட்டியதா, இல்லையா?

காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறார். போலீசோ லட்சுமி என்றால் யார் என்ன என்று கேட்க அதற்குப் பல விதங்களில் மழுப்பும் விஜய் சேதுபதி ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல போலீஸோ இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். எப்படியாவது போலீசை இந்த வழக்கை விசாரிக்க செய்ய அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக விஜய் சேதுபதி சொல்ல போலீசும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கேசை கையில் எடுக்கிறது. யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க வேண்டும் எனத் துடிக்கிறார்? உண்மையில் விஜய் சேதுபதிக்கு என்னவாயிற்று? அவரது காயங்களுக்கு யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறார் இந்த மகாராஜா. 

சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத இந்தச் சூழலில் தன்னுடைய பிளஸ் எதுவோ அதைப் பிரதானமாக வைத்துக் கொண்டு அதே சமயம் கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையான படத்தைக் கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்து வெற்றி அணையில் ஏறி இருக்கிறார் விஜய் சேதுபதி. நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய ஒரு சமூகத்துக்கு தேவையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனைத் தனது சிறப்பான நான் லீனியர் திரைக்கதை மூலம் மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்து சூப்பர் ஹிட் படமாக இப்படத்தை கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். முதல் பாதி முழுவதும் மர்மமான முறையில் கதையை நகர்த்தி நக்கலும் நையாண்டியமாக சிரிக்க வைக்கும்படி பிளாக் காமெடி உடன் கதை நகர்ந்து இரண்டாம் பாதியில் நாம் எதற்கெல்லாம் சிரித்து ஏளனமாக இருந்தோமோ அதை எல்லாம் மிக சிறப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கும் பொழுது மிக மிக சீரியசான ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த மகாராஜா கொடுத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதி நாம் எதிர்பாராத பல்வேறு ட்விஸ்டுகளை உள்ளடக்கி காட்சிக்கு காட்சி ஆச்சரியங்களையும் சுவாரசியத்தையும் கூட்டி முடிவில் நெகிழ்ச்சியான திரில்லர் படமாக படம் நிறைவடைந்து தியேட்டரில் கைத்தட்டல்களை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி கரியரிலேயே இது ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க கவனிக்க கூடிய ஒரு படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே பல்வேறு விதமான லாஜிக் மிஸ்டேக்குகள் பல இடங்களில் படர்ந்து காணப்பட்டாலும் அவை பெருமளவு அயற்சி ஏற்படாதவாறு இருப்பது படத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருந்தும் அந்தச் சிறு சிறு குறைகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். 

Vijaysethupathi's maharaja movie review

விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பின் மூலம் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக கையாண்டு அதற்கு ஏற்றவாறு கதையும், திரைக்கதையும், அதற்கு உதவி செய்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறது. இவருக்கும் போலீசுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாது உடன் நடித்த மற்ற நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை வெற்றி படமாக மாற்ற உதவி செய்துள்ளனர். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பயமுறுத்தி இறுதிக் காட்சிகளில் நெகிழவும் செய்திருக்கிறார். போலீசாக நடித்திருக்கும் நட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நட்டி, அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அதைச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். 

Vijaysethupathi's maharaja movie review

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் தலை காட்டி இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் ஒரு நல்ல தேர்வு. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெற்றுள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சிங்கம் புலி, அதைச் சிறப்பாக செய்து இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் திவ்யபாரதி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா அனுபவ நடிப்பால் கவர்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே அவரவர் வேலைகளை மிக மிக சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க பெருமளவு பங்களிப்பு கொடுத்துள்ளனர். 

படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையைத் தனக்குக் கொடுத்த ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்தி மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அஜனீஸ் லோகநாத். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு சத்தம் தேவையோ ஒரு திரில்லர் படத்துக்கான இசையை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் மற்றும் பொது ரசிகர்களுக்கும் திருப்திகரமான படமாக இந்த மகாராஜா மாறி இருக்கிறது. சமூகத்துக்கு தேவையான கதையைக் கையில் எடுத்து நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து ஹாலிவுட் படத்திற்கு நிகரான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். மேலும், ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் நிறைவான படமாக அமைந்திருக்கிறது. நாயகர்களை காட்டிலும் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் நிரூபித்திருக்கிறது. 

 

மகாராஜா - மதிப்பு மிக்க ராஜா!

Next Story

‘பிதா’ திரைப்பட அறிவிப்பு விழா!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
pitha tamil movie

இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில்,  மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தினை  SRINIK PRODUCTION  சார்பில் தயாரிப்பாளர்கள் பாலசுப்பிரமணி மற்றும் சதீஷ் குமார் தயாரிக்கின்றனர்.

இந்நிகழ்வினில் நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது “மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது,  கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார். 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது “பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்” என்றார்.

சுந்தரவள்ளி பேசியதாவது “தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

திருமுருகன் காந்தி பேசியதாவது “திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.  அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்


நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது “எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும்.  எக்ஸாம் தோல்வி  அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட்   என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள்  வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும். இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன்.  இந்தப்படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது “எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.


நாஞ்சில் சம்பத் பேசியதாவது “நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி” என்றார்