Skip to main content

“இந்தக் கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார்” - ஹிப்ஹாப் ஆதி

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
hip hop adhi speech in pt sir press meet

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பி.டி.சார். அவரே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் 25வது படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது, “ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷுக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது, ஆனால்  கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள், இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக  இருக்கும்” என்றார். 

ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது, “4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்